திங்கள், மார்ச் 07, 2011

தமிழா வாழ்க நீ பல்லாண்டு1

கீழ்கண்ட முகவரியில் உள்ள விவாதத்தின் தொடர்ச்சியாக அதற்கும் கீழே உள்ளதை படிக்கவும் (யப்பா..யய்யா..எங்கிருந்துதான்யா நாங்க படிக்கிறது..).

http://www.proz.com/kudoz/english_to_tamil/social_science_sociology_ethics_etc/4263544-drop_in_center.html?pwd=v75S

இதுதான் மிகச்சரியான இடம் என நான் கருதுகிறேன். எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான். தங்கமாக இருந்தாலும் உரசிப்பார்ப்பது நன்று. நான் இங்கு கேட்கும் வினாக்கள் எல்லாம் பின்வரும் காரணங்களினாலோ அல்லது பெரும்பான்மையான காரணங்களினாலோ இருக்கலாம். அவற்றைப் பற்றி பட்டியல் இடுவதற்கு முன்னர் தோழர் சுந்தர்ராஜ் சுரேஷ் அவர்களே!

2007ம் ஆண்டில் இதே புரோசில் “Sexy girls in panties' என்ற வினாவுக்கு உங்கள் கருத்தையும் பதிவுசெய்துள்ளீர்கள் என மறந்துவிடாதீர்கள். அதைவிட நான் கேட்ட கேள்விகள் எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல.

http://www.proz.com/kudoz/english_to_tamil/internet_e_commerce/1749932-sexy_girls_in_panties.html

மேலும் எனது கருத்துகளை

http://chennai2kanyakumari.blogspot.com/

ல் காணவும்

அவையாவன

1) இது, ஏதோ பொழுதுபோக்கிற்காக கேட்கப்படுவது அல்ல. (அ) இதற்கு முன்னர் என்னுடைய ஐயங்களுக்கு தங்கள் கருத்தை பதிவு செய்தவர்கள் எல்லாம் பொழுது போகாமல் புலம்புபவர்கள் அல்ல. நான் எடுத்துச் செய்கின்ற “மொழிபெயர்ப்புப் பணி“ சார்ந்த, அதிலுள்ள சொற்கள் தானேயன்றி வேறொன்றுமில்லை. உங்களுக்கோ அல்லது புரோஸ் சமூகத்திற்கோ அல்லது புரோஸ் நிறுவனத்திற்கோ எனக்கு “பணி“ தந்தவரின் ஒப்பதலோடு தேவையானால் என்னால் நிரூபிக்க முடியும்.

2) நான் தேடும் “சொற்கள்“ அல்லது “சொற்றொடரின்“ நேரடி தமிழ்ச்சொல் முழுமையாக இல்லாமல் இருப்பது.

3) எந்த ஒன்றையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அளவில் கொண்டு செல்வதற்கு முன்னர் பரிசோதனை ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று. (எ-கா) புதிய மருந்துகள்.

ஒரு தனிமனிதனின் நலனுக்கே இத்தகைய ஆய்வு தேவைப்படுகிற போது “ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அதன் மொழியை முதலில் அழி“ என்று இன எதிரிகள் கூறுகின்ற அளவுக்கு ஒரு இனத்தின் பல கோடி மக்கள் நாடியிலும் நரம்பிலும் கலந்து ஓடுகின்ற அந்த மொழிச் சொற்களை குறித்து ஒரு விவாதம் என்றால் அதனை உங்களைப் போன்ற எண்ணற்ற சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் உள்ள இதுபோன்ற களங்களில் முதலில் நடத்துவதுதான் மிகப்பொருத்தமாக இருக்கும்“

“புரோஸ்“ மொழிபெயர்ப்பாளர்களுக்கான களம். “யார் குத்தினால் என்ன...அரிசி வெளுத்தால் சரி“ என ஒரு பழமொழி உண்டு. ஒரு கடினமான ஆங்கில சொல்லுக்கொ அல்லது ஆங்கில சொற்றொடருக்கோ யாராவது ஒருவர் தனது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி ஒரு முன்மாதிரி தமிழ்ச்சொல்லை சபையில் வைத்தால் அதனால் தமிழ்க்கூறு நல்லுலகத்திற்கு ஒரு சிறு துரும்பு அளவாவது நன்மை கிடைக்கிறது என்றால் அதனை வரவேற்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

4) உலகின் முதல் மனித இனம் “திராவிட“ இனம் முதல் மொழி “தமிழ் மொழி“ என்றெல்லாம் கூறப்படுகிற தமிழ்மொழி, செம்மொழி தகுதிப்பெற்ற தமிழ்மொழியில் புதிய சொற்கள் குறித்த விவாதம், முதுகலை அறிஞர்கள், பேராசிரியர்கள் மத்தியில் எங்கோ ஒரு சிறுவட்டத்திற்குள், அரசு சார்ந்த குழுவில் அல்லது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் முறையாக நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. அங்கெல்லாம் ஒரு ஆங்கில சொல்லுக்கு பலர் தங்கள் அறிவுக்கு எட்டிய சொல்லை முதலில் சபையில் வைத்துதான் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

5) நான் இதுவரை பின்வரும் ஆங்கில சொற்களை (அ) ஆங்கில சொற்றொடர்களை புரோஸ் சமூகத்தின் முன் வைத்துள்ளேன்.

அவையாவன

அ) RIGGING GEAR

ஆ) Body copy

இ) Gold Future

ஈ) Drop-in-Center

மேலே உள்ள ஆங்கில சொற்கள் பண்டைய தமிழ் காலத்தில் எங்கேனும் பயன்படுத்தப்பட்டு, அதற்கு வகைவகையான பொருத்தமான தமிழ்ச்சொற்களை உங்களால் கூறுமுடியுமா? நான் என்ன வைத்துக்கொண்டா, வேண்டும் என்று கேட்டேன்.

அல்லது, அதற்கு இணையான தமிழ்ச்சொல்லை உங்களால் சொல்ல முடியுமா? சவால்

6) “பேச்சுரிமை, எழுத்துரிமை குறித்து மேடையில்கூட பேச முடியாமல் போகும் அளவுக்கு காலம் கெட்டுவிட்டது“ என்று எனது நண்பர் ஒருவர் இன்று காலைதான் புலம்பினார். அதில் “இணையதளத்தில் கூட“ என்று சேர்த்துக் கொள்ளலாம் போல் உள்ளது. உலகெங்கும் பரந்துவிரிந்துள்ள தமிழனுக்கு ஒரு தனி நாடுதான் இல்லை..அவனை ஒருங்கிணைக்கும் இதுபோன்ற இணையதளத்திலும் வாய்ப்பூட்டுச் சட்டமா? தமிழா வாழ்க நீ பல்லாண்டு௧

1.Don't find fault. Find a remedy.

-- Henry Ford

2. Any activity becomes creative when the doer cares about doing it right, or better.

--John Updike

3. Become addicted to constant and never ending self improvement.

--- Anthony J. D'Angelo

4. Good, better, best; never let it rest till your good is better and your better is best.

--- Unknown Author

5. Somebody once said "The biggest room in the world is the room for improvement." Make room in your life for improvement. And if you think you are already very good, look closely. You might still want to tweak a few things to make you better.

http://quotations.about.com/cs/inspirationquotes/a/GettingBette1.htm


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு