ஞாயிறு, பிப்ரவரி 03, 2013











திங்கள், மார்ச் 07, 2011

தமிழா வாழ்க நீ பல்லாண்டு1

கீழ்கண்ட முகவரியில் உள்ள விவாதத்தின் தொடர்ச்சியாக அதற்கும் கீழே உள்ளதை படிக்கவும் (யப்பா..யய்யா..எங்கிருந்துதான்யா நாங்க படிக்கிறது..).

http://www.proz.com/kudoz/english_to_tamil/social_science_sociology_ethics_etc/4263544-drop_in_center.html?pwd=v75S

இதுதான் மிகச்சரியான இடம் என நான் கருதுகிறேன். எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான். தங்கமாக இருந்தாலும் உரசிப்பார்ப்பது நன்று. நான் இங்கு கேட்கும் வினாக்கள் எல்லாம் பின்வரும் காரணங்களினாலோ அல்லது பெரும்பான்மையான காரணங்களினாலோ இருக்கலாம். அவற்றைப் பற்றி பட்டியல் இடுவதற்கு முன்னர் தோழர் சுந்தர்ராஜ் சுரேஷ் அவர்களே!

2007ம் ஆண்டில் இதே புரோசில் “Sexy girls in panties' என்ற வினாவுக்கு உங்கள் கருத்தையும் பதிவுசெய்துள்ளீர்கள் என மறந்துவிடாதீர்கள். அதைவிட நான் கேட்ட கேள்விகள் எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல.

http://www.proz.com/kudoz/english_to_tamil/internet_e_commerce/1749932-sexy_girls_in_panties.html

மேலும் எனது கருத்துகளை

http://chennai2kanyakumari.blogspot.com/

ல் காணவும்

அவையாவன

1) இது, ஏதோ பொழுதுபோக்கிற்காக கேட்கப்படுவது அல்ல. (அ) இதற்கு முன்னர் என்னுடைய ஐயங்களுக்கு தங்கள் கருத்தை பதிவு செய்தவர்கள் எல்லாம் பொழுது போகாமல் புலம்புபவர்கள் அல்ல. நான் எடுத்துச் செய்கின்ற “மொழிபெயர்ப்புப் பணி“ சார்ந்த, அதிலுள்ள சொற்கள் தானேயன்றி வேறொன்றுமில்லை. உங்களுக்கோ அல்லது புரோஸ் சமூகத்திற்கோ அல்லது புரோஸ் நிறுவனத்திற்கோ எனக்கு “பணி“ தந்தவரின் ஒப்பதலோடு தேவையானால் என்னால் நிரூபிக்க முடியும்.

2) நான் தேடும் “சொற்கள்“ அல்லது “சொற்றொடரின்“ நேரடி தமிழ்ச்சொல் முழுமையாக இல்லாமல் இருப்பது.

3) எந்த ஒன்றையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அளவில் கொண்டு செல்வதற்கு முன்னர் பரிசோதனை ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று. (எ-கா) புதிய மருந்துகள்.

ஒரு தனிமனிதனின் நலனுக்கே இத்தகைய ஆய்வு தேவைப்படுகிற போது “ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அதன் மொழியை முதலில் அழி“ என்று இன எதிரிகள் கூறுகின்ற அளவுக்கு ஒரு இனத்தின் பல கோடி மக்கள் நாடியிலும் நரம்பிலும் கலந்து ஓடுகின்ற அந்த மொழிச் சொற்களை குறித்து ஒரு விவாதம் என்றால் அதனை உங்களைப் போன்ற எண்ணற்ற சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் உள்ள இதுபோன்ற களங்களில் முதலில் நடத்துவதுதான் மிகப்பொருத்தமாக இருக்கும்“

“புரோஸ்“ மொழிபெயர்ப்பாளர்களுக்கான களம். “யார் குத்தினால் என்ன...அரிசி வெளுத்தால் சரி“ என ஒரு பழமொழி உண்டு. ஒரு கடினமான ஆங்கில சொல்லுக்கொ அல்லது ஆங்கில சொற்றொடருக்கோ யாராவது ஒருவர் தனது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி ஒரு முன்மாதிரி தமிழ்ச்சொல்லை சபையில் வைத்தால் அதனால் தமிழ்க்கூறு நல்லுலகத்திற்கு ஒரு சிறு துரும்பு அளவாவது நன்மை கிடைக்கிறது என்றால் அதனை வரவேற்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

4) உலகின் முதல் மனித இனம் “திராவிட“ இனம் முதல் மொழி “தமிழ் மொழி“ என்றெல்லாம் கூறப்படுகிற தமிழ்மொழி, செம்மொழி தகுதிப்பெற்ற தமிழ்மொழியில் புதிய சொற்கள் குறித்த விவாதம், முதுகலை அறிஞர்கள், பேராசிரியர்கள் மத்தியில் எங்கோ ஒரு சிறுவட்டத்திற்குள், அரசு சார்ந்த குழுவில் அல்லது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் முறையாக நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. அங்கெல்லாம் ஒரு ஆங்கில சொல்லுக்கு பலர் தங்கள் அறிவுக்கு எட்டிய சொல்லை முதலில் சபையில் வைத்துதான் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

5) நான் இதுவரை பின்வரும் ஆங்கில சொற்களை (அ) ஆங்கில சொற்றொடர்களை புரோஸ் சமூகத்தின் முன் வைத்துள்ளேன்.

அவையாவன

அ) RIGGING GEAR

ஆ) Body copy

இ) Gold Future

ஈ) Drop-in-Center

மேலே உள்ள ஆங்கில சொற்கள் பண்டைய தமிழ் காலத்தில் எங்கேனும் பயன்படுத்தப்பட்டு, அதற்கு வகைவகையான பொருத்தமான தமிழ்ச்சொற்களை உங்களால் கூறுமுடியுமா? நான் என்ன வைத்துக்கொண்டா, வேண்டும் என்று கேட்டேன்.

அல்லது, அதற்கு இணையான தமிழ்ச்சொல்லை உங்களால் சொல்ல முடியுமா? சவால்

6) “பேச்சுரிமை, எழுத்துரிமை குறித்து மேடையில்கூட பேச முடியாமல் போகும் அளவுக்கு காலம் கெட்டுவிட்டது“ என்று எனது நண்பர் ஒருவர் இன்று காலைதான் புலம்பினார். அதில் “இணையதளத்தில் கூட“ என்று சேர்த்துக் கொள்ளலாம் போல் உள்ளது. உலகெங்கும் பரந்துவிரிந்துள்ள தமிழனுக்கு ஒரு தனி நாடுதான் இல்லை..அவனை ஒருங்கிணைக்கும் இதுபோன்ற இணையதளத்திலும் வாய்ப்பூட்டுச் சட்டமா? தமிழா வாழ்க நீ பல்லாண்டு௧

1.Don't find fault. Find a remedy.

-- Henry Ford

2. Any activity becomes creative when the doer cares about doing it right, or better.

--John Updike

3. Become addicted to constant and never ending self improvement.

--- Anthony J. D'Angelo

4. Good, better, best; never let it rest till your good is better and your better is best.

--- Unknown Author

5. Somebody once said "The biggest room in the world is the room for improvement." Make room in your life for improvement. And if you think you are already very good, look closely. You might still want to tweak a few things to make you better.

http://quotations.about.com/cs/inspirationquotes/a/GettingBette1.htm


சனி, டிசம்பர் 06, 2008

அச்சுதானந்தன் 'நாய்' என்று பேசினாரா?

பெரியோர்களே.. தாய்மார்களே..அருமை இல்லாத வீட்டில் எருமை கூட குடியிருக்காது.. பூவிலே சிறந்த பூ என்ன பூ என்று கேட்டால் ..கப்பூ ..என்று ..கூவம் ஆறு கூத்தடிக்கலாம் ..மப்பூ..என்று டாஸ்மாக் தமுக்கு அடிக்கலாம்....அரிப்பூ என்று சொறிநாய் கூட ..ச்சீ..ச்சீ..சுத்தமான பூனைக்கூட சொல்லலாம்..அய்யய்யோ..வாய் தவறி பூனைன்னு சொல்லிட்டனே ..(மெதுவாக) .இம்..இம்..(தொண்டையை கனைக்கிறார்பூனை என்று சொன்ன காரணத்தினால் ..வெளுப்பனை வழியில மறிச்சு மிதிக்கலாம்..குறுக்கு சந்துல குமுறலாம்..குருக்கேலும்ப எண்ணலாம் என்று ..எட்ட முடியாத எட்டு முழ நீளத்திற்கு ..உள்நாக்கு வெளியே தொங்க.. யானையப்போல் தலையை ஆட்டி ஆட்டி அலையும்..அனகோண்டா கட்சித்தலைவரே.. ..அய்யய்யோ.. வாய் தவறி யானைன்னு சொல்லிட்டனே.. (மெதுவாக)..யானைய பார்த்து யானை என்று பிளிறாமல்.. பூனை என்றா புளுக முடியும்?.. உங்களுக்காக வேண்டுமானால் சொல்லித்தொலைக்கிறேன்..மியாவ்..மியாவ்.. போதுமா..(மக்கள் கூக்குரல்) (அதிர்ச்சியாகிறார் வெளுப்பன் ) (கும்பிடுகிறார்) ....மன்னிப்பூ . . மன்னிப்பூ... பூவிலே சிறந்த பூ..மன்னிப்பூ.. பூனை என்று கூறிய காரணத்தினால்.. பெருச்சாளியப்போல் நாலு காலில் நடந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா?.. வேலியில் ஓடும் ஒனானைப்போல் மண்டையை மண்டையை ஆட்டி மன்னிப்பு கேட்க வேண்டுமா? ..எங்கே போகிறோம் ..எதற்குப்போகிறோம் ..என்றுக்கூடத் தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கும் மண்புழுவைப்போல் மன்னிப்பு கேட்க வேண்டுமா?....(கைத்தட்டல்) ..நீங்கள் வயிறேருஞ்சுபோட்ட வாக்குக்கெல்லாம் விசுவாசமாக..ஒரு நாயைப்போல் உழைக்கும் வெளுப்பன்..பூனை என்று சொல்லக்கூடாதா?..சூடு சொரணை என்றால் என்னவென்றே அறியாமல், மல்லாந்து, குனிந்து,நிமிர்ந்து,உருண்டேல்லாம் மன்னிப்பு கேட்கிறேனே..இதெல்லாம் ஒரு பிழைப்பா..என்று நீங்கள் மட்டும் வெளுப்பனைக்குறை சொல்லி ,கொசு மருந்து அடிக்கலாமா? எப்பொருள் சொன்னார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை..வெளுப்பனுக்கும்..அவன் அளந்து விடும் பொய்க்கும்..நிலா.நிலா.ஓடி வா.......

திங்கள், டிசம்பர் 01, 2008

டோனி பிளேரை ஒட்டுக்கேட்டதா அமெரிக்கா?

வணக்கம்.வருக வருக என வாயார வாழ்த்துகிறேன்.என்றும் உங்கள் ஆலிரத்.அசோக்குமார்.
செய்தி -----டோனி பிளையரை உளவு பார்த்ததா அமெரிக்கா ?வெளுப்பன்:பெரியோர்களே.., தாய்மார்களே ...ஓட்டை காதிலே பாட்டு...ஓட்டகக்காதிலே பூட்டு..ஒட்டுக்கேக்கிற பொழப்ப வச்சி ...ஒட்டு வாங்குற கொட்டாங்குச்சி தலைவரைப் பார்த்துக் கேட்கிறேன் ..முட்டுச்சந்தில ஒட்டுக்கேட்கலாம் ...முட்டிப்போட்டு ஒட்டுக்கேட்கலாம்..ஆனால்... வெளுப்பனோட கொட்டாவியக்கூட உன்னால் ஒட்டுக்கேட்க முடியாது.. வெளுப்பன் என்ன காண்டாமிருகத்துக்கும் காக்கா கூட்டத்துக்கும் நடுவில உட்கார்ந்து நாதசுரமா வாசிக்கிறேன்? ..நீ ஒட்டு கேட்ப்பதற்கு? நாட்டு நடப்பை புட்டுக்குழாயில் போட்டு புட்டு புட்டு வைக்கிறேன் ..கேட்ப்பதற்கு கஷ்டமாக இருந்தால் கேப்பை கஞ்சி கூழ் வாங்கிக்குடி ..அதை விட்டுவிட்டு ..வெளுப்பனோட அந்தரங்க விசயங்களை ..சந்து பொந்தில் உட்கார்ந்து ஒட்டுக்கேட்டால் ..சந்ததியே இல்லாமல் சாம்பலாகிப்போவாய் என சாம்பார் சோறு மீது சத்தியம் செய்து சொல்கிறேன்..காலை எழுந்தவுடன் பல் விளக்கு ..பின்பு பக்கத்து வீட்டுக்காரனைப்பார்த்து காரித்துப்பு ...அந்த கதையில கோட்டு சூட்டெல்லாம் கோளாறா மாட்டிக்கிட்டு ஒட்டைப்பிரிச்சு ஒட்டுக்கேட்கிற ஒட்டகச்சிவிங்கியே ..பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்தில உன்னை ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்காமல் விடமாட்டான் இந்த வெளுப்பன் ..தெளிவாக ஒட்டு கேட்க்கனுங்கிறதுக்காகவே.. தேங்கா எண்ணையில தேன் குழலை போட்டு குழப்பி ,கஸ்தூரி மஞ்சள்ள இஞ்சி மரப்பானை போட்டு இடிச்சி ..உச்சி மண்டையில தேய்ச்சி குளிச்சிட்டு வரும் குடி கெடுக்கும் கோமான்களே ..நீங்க எல்லாம் உருப்படுவீங்களா? ...நாசமாபோவீங்க ..ஊரான் வீட்டு கதை என்ன ..பண்பலை வானொலியா ?.. கூட்டமா உட்கார்ந்து ஒட்டுக்கேட்பதற்கு ?..ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு ..கடைசியில மக்காச்சோலத்த முழுங்கின கதையா ..இந்த கா..கா..ச்சீ.ச்சீ. கட்சி ....மா.மு.மூ.க.கட்சி....,ச்சே..ச்சே..தூ..தூ..கட்சி...,இந்த கண்றாவி பிடிச்ச கட்சி தலைவரை எல்லாம் ஆனைக்காது வச்சு ஒட்டு கேட்டு கடிச்சு துப்பி போட்டு கடைசியா தப்பித்தவறி வெளுப்பன் பக்கம் வந்தீங்க ...காணாமல் போயிடுவான் வெளுப்பன் ..இதையும் மீறி யாராவது வெளுப்பனை ஒட்டுக்கேட்டால் ..காது ரெண்டையும் கடித்து குழம்பு வைத்துவிடுவான் வெளுப்பன்..நிலா நிலா ஓடி வா.....

வியாழன், நவம்பர் 27, 2008

ஒக்கேனக்கல் பிரச்சினையில் பிரதமர் தலையிடமாட்டார்

வணக்கம்.வருக வருக என வாயார வாழ்த்துகிறேன்.என்றும் உங்கள் ஆலிரத்.அசோக்குமார்.
செய்தி -----ஒகேனக்கல் பிரச்சினையில் பிரதமர் தலையிடமாட்டார் .இரு மாநிலங்கள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.
வெளுப்பன்: வணக்கம்.வேலை வெட்டி அத்தவங்களே வீணா போனவங்களே . வீட்டுக்கு மேல தண்ணி தொட்டி கட்டுவீங்களோ ,இல்லை தொட்டிக்கு மேல சட்டி வச்சு ,முட்டை பிரியாணி மூட்டை சோறு கட்டுவீங்களோ ,அது உங்க இஷ்டம். அவன் தண்ணி தொட்டி கட்டுனா பக்கத்து தெரு மொட்டை மாடி மறைக்குதுன்னு சொல்லி, உங்க தெரு பிரச்சினையெல்லாம் கொண்டுக்கிட்டு இந்த வெளுப்பன்கிட்ட வந்துடாதீங்க சொல்லிபுட்டேன் ஆமா ..பைசா கோபுரம் மேல ஏறி கேட்டாக்கூட ஓசியில பீசா கிடைக்காது ..நீங்க கூட்டமா சேர்ந்துகிட்டு கும்மி அடிச்சிகிட்டு வந்தாக்கூட ,பல் விளக்காம பஞ்சாயத்துக்கு வரமாட்டான் இந்த வெளுப்பன். கத்தாரில இருந்து கத்தை கத்தையா எப்படி கடன் வாங்குறது? துபாயில இருந்து பீப்பாய் பீப்பாயா எப்படி கோரைப்பாயை சுருட்டுறது? லண்டன்ல இருந்து வண்டி வண்டியா அண்டிப்பருப்பை எப்படி அமுக்குகிறது? ஊழல் பண்ண துட்டைஎல்லாம் உகாண்டாவில் எப்படி ஒளிக்குறது ?ஆஸ்தியெல்லாம் கொண்டு போய் ஆஸ்திரேலியாவில் எப்படி பதுக்குறது? னு சர்வதேச பிரச்சினைய தீர்கிறதுக்கு உள்ளேயே கண்ணாம்முழிஎல்லாம் பிதுங்கி கால் அடி வெளியே தள்ளி நிக்குறான் வெளுப்பன்.. இதுல அமெரிக்க உப்புமா வேற சாப்பிட்டுட்டு புளிச்ச ஏப்பமா வந்துக்கிட்டு இருக்குதுன்னு வெளுப்பனே கதிகலங்கிப்போய் டப்பாங்க்கூத்துப்போடுற இந்த நேரத்துலப்போய் ,அவன் தண்ணி தொட்டி கட்டுறான் ,குப்பை தொட்டி கட்டுறான்னு ,சப்பை விசயத்தஎல்லாம் கொண்டுவந்தீங்க,வெறியாயிடுவான் வெளுப்பன்..சொல்லிபுட்டேன் ..உங்க மொட்டை மாடி பிரச்சினைய தீர்கிறதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு..அந்த வழி என்னன்னா.. கிழக்கு கடற்க்கரைச்சாலை ...இந்த சாலை மேல ஏறி ரெண்டுபேரும் கொஞ்ச தூரம் நடங்க ..அப்புறம் ஒடுங்க ..ஒடுங்க ஒடுங்க ..வேகமா ஒடுங்க..மெரீனா கடற்கரை வரும்.. அங்கே போய் உட்கார்ந்துட்டு ரெண்டுபேரும் சூடா சுண்டல் வாங்கி சாப்பிட்டுட்டு அப்படியே படுத்து தூங்கிடாதீங்க ..சாப்பிட்டுட்டே பேசணும்..உட்கார்ந்துதான் பேசணும்னு இல்லை..ஒத்த கால்ல நின்னுக்கிட்டுக்கூட பேசலாம் ..மல்லாந்து படுத்துக்கிட்டுக்கூட பேசலாம்..ஆனா..காக்கா எச்சம் போட்டா நான் பொறுப்பு இல்லை ..மழை வந்தா குடைய விரிச்சிக்கிட்டு பேசுங்க..வெயில் அடிச்சா.. தயிர் வடைய வாங்கி சாப்பிடுங்க.. வாய் வலிச்சா இடையிடையே கொட்டாவி விட்டுக்கோங்க..இப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா ,அதுக்குள்ளே இந்த ஆட்ச்சியே திவால் ஆயிடும் ..மக்களும் மசால் வடை திங்கிற அவசரத்தில இந்த பிரச்சனைய மறந்திடுவாங்க.. சாம்பார் சொத்துக்கு சோன்பப்படிய தொட்டுக்கலாம்..ஆனா தாகத்துக்கு தண்ணி பாம்பை குடிக்க முடியாது..நான் வருகிறேன். என்ன?என்னோட பூங்கா பிடிச்சிருக்கா? உங்க எ-மெயில என்னோட இ-மெயிலுக்கு அனுப்புங்க ..நான் உங்களை என்னோட கூட்டணியில சேத்துக்குவேன்.. அப்புறமா நீங்களும் என்னோடு சேர்ந்து நக்கல் நையாண்டி அடிக்கலாம்..நிலா நிலா ஓடி வா..